உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான ஜெட் விமானத்தை சீனா மீண்டும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான ஜெட் விமானத்தில் முன்மாதிரியாகத் திகழும் c919 என்ற விமானத்தை சீனா சோதனை செய்தது. இரண்டு மணி நேர சோதனைப் பயணத்தின் போது அதன் முக்கிய பாகங்களின் இயக்கம், புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தின் போதான செயல்பாடு, வழிகாட்டுக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், வேகத்தை அதிகரித்தல் மற்றும் குறைத்தல் உள்ளிட்டவை சீராக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *