உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

ஹாக்கி போட்டியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – அர்ஜெண்டினா அணிகள் மோதின. இப்போட்டியின் 17-வது நிமிட ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் கொன்சாலோ பெய்லாட் கோல் அடித்தார். இறுதிவரை இந்திய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *