உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி 2வது முறையாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

மூன்றாவது உலக ஹாக்கி லீக் பைனல் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மூன்றாவது, நான்காவது இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அர்ஜெண்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜெண்டினா அணியை 2க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தங்கப் பதக்கம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *