உலகின் மிக வேகமான ஜெட் பேக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பவுரிணிங்,ஜெட் பேக்கை உருவாக்கி, அதன் மூலம் வானில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் வடிவமைத்துள்ள ஆடையில் ஆறு எரிவாயு கலன்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தி முன்னேறி செல்வதற்கு உதவுகிறது. ரிச்சர்ட் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்றார். அவரது ஜெட் பேக்கை சோதனை செய்து பார்த்த கின்னஸ் சாதனை பதிவாளர் பிரவின் படேல் அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *