இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய முகமைக்கு அதிகாரம் இல்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச முகமை அறிவுறுத்தலின் பேரில் கிரிக்கெட் வீரர்களை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த ஒத்துழைக்க பி.சி.சி.ஐ.யை ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய முகமையான NADA வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ தலைமைச் செயலதிகாரி ராகுல் ஜோரி, NADA தலைவர் நவீன் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பி.சி.சி.ஐ தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பில் இல்லாததால் கிரிக்கெட் வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த NADAவுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஊக்கமருந்து சோதனை அமைப்பே போதுமானது என்று கூறியுள்ள அவர், பி.சி.சி.ஐ.யின் எந்த அலுவலரும் NADAவுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *