இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம், டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஒரு நாள் தொடரை கைப்பற்றியது போன்று, 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *