இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா தோல்வியுற்றால் தொடரை இழந்து விடும் என்பதால், இந்திய அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *