இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இலங்கை அணி ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *