கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பூங்காவில், ஆண்டு இறுதியின் காரணமாக, கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் குழந்தைகள், குடும்பத்துடன் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு மின்தடை ஏற்பட்டதால், கேளிக்கைப் பூங்காவின் பல பகுதிகளை இருள் சூழ்ந்தது. டூன் டவுன், ஃபேன்டசி லேண்ட் ஆகிய பகுதிகளில் இருந்த பொழுதுபோக்கு அம்சங்களும், மோனோ விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன.
2017-12-29