அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போலவே சீனாவும் தலையிட்டதாக அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போலவே சீனாவும் தலையிட்டதாக அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போலவே சீனாவும் தலையிட்டதாக, அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும், தாம் அதிபராக இருப்பதை சீனா விரும்பவில்லை என்றும் டிரம்ப் கடந்த மாதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்புத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும், ரஷ்யாவைப் போலவே சீனாவும் தலையிட்டதாக டிரம்ப் புகார் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவும் தலையிட்டது, சீனாவும் தலையிட்டது என்றும், ஆனால் சீனாதான் மிகப்பெரிய பிரச்சனை என்றும் கூறியுள்ளார். ரஷ்யாவின் தலையீடு பற்றிய பிரச்சனையை திசைதிருப்புவதற்காக தான் இவ்வாறு கூறவில்லை என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் தலையீடு பற்றிய விசாரணையை முடக்கும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லை என்றும், ஆனால் அந்த விசாரணை முற்றிலும் நியாயமற்றது என்றும் டிரம்ப் குறைகூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *