அதிக போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால், ஐ.பி.எல். தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது. நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஐந்து ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 4வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை பெய்தது.
இதையடுத்து ஆட்டம் கைவிடப்பட்டு ராஜஸ்தான், பெங்களுரு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.