அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென் கடலோர தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும் என்றும், கடந்த ஒரு வாரமாக வால்பாறை பகுதியில் நிலவி இருந்த உறை பனி குறைந்துள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்தபட்சமாக உதகையில் 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மழை எங்கும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளது.
சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.