நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பேட்டி

தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். சரக்கு மற்றும் சேவை வரி விவகாரங்களைக் கவனித்துவரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் அவருடன் புறப்பட்டுச் சென்றனர். இன்று காலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றார். அவர்களுடன் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் மோடியைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சிகளுக்கான கடந்த ஆண்டு நிலுவைத்தொகை, நடப்பாண்டுக்கான முதல் தவணை, மீனவர்களுக்கான புதிய திட்டம், இயற்கை பேரிடர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உதவித் தொகை என தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *