நடிகர் சக்தி குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து

திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி, சென்னையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது Ford Ecosport காரில் வேகமாகச் சென்று, நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி நடிகர் சக்தி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரளவே, காரை பின்னோக்கி இயக்கியபடி சக்தி தப்ப முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் காரை விடாமல் சூழ்ந்து கொண்ட மக்கள், காருக்குள் இருப்பது நடிகர் சக்தி எனத் தெரிந்ததும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்துகையில் சக்தி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சக்தியையும், அவர் உடன் இருந்த  நண்பரையும் காரிலேயே அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் அழைத்துச் சென்றனர். அப்போது காரை விட்டு இறங்க சக்தி மறுத்தார்.

அவரை சமாதானம் செய்து இறக்கிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *