சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவரும் கலந்து கொண்டார். இவர் காளை ஒன்றை அடக்க முற்பட்டு, பின்புறத்தில் இருந்து திடீரென வேகமாக ஓடிச் சென்று அதன் திமிலை பிடிக்க முயன்றார். இதனை எதிர்பாராததால் மிரட்சி அடைந்த காளை, அவரை தனது கூர்மையான கொம்புகளால் குத்திக் கிழித்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்த பாலகுரு, சில நொடிகளில் உயிரிழந்தார். இந்த மஞ்சுவிரட்டு போட்டி அனுமதி இல்லாமல் நடைபெற்றதால் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2019-05-26