ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான மூனிக் நகரில், கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது. கனமழை போல், பனிவிழுவதால், விமானங்கள் இறங்கவும், புறப்பட்டுச் செல்லவும், அனுமதிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதனால், 120 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை முடிந்து, அவரவர இடங்களுக்குச் செல்ல வந்தவர்கள், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்..