சர்வதேச இசைக்கான 61 வது கிராமி விருதுகள் நேற்றிரவு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற சில முக்கிய இசை நட்சத்திரங்களின் தொகுப்பு இது.
சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் கிராமி இசை விருதுகள் நேற்றிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றன. இவ்விழாவில் 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் எலக்ட்ரானிக் ஆல்பம் மற்றும் நடனப்பிரிவில் woman world wide பாடலுக்கு விருது அளிக்கப்பட்டது. நடனப்பிரிவில் எல்க்ட்ரிசிட்டி விருது பெற்றது.
சிறந்த பாப் பாடகருக்கான விருதை ஸ்வீட்னர் பாடலுக்காக ஆரியானா கிரான்டே பெற்றார். தனியாக பாப் அரங்கேற்றத்திற்கான விருதை லேடி காகா பெற்றார்.
சிறந்த நாட்டுப்புற பாடல்களை இயற்றியவருக்கான விருதை ஸ்பேஸ் கௌபாய் பாடல் ஆல்பத்திற்கு பாடல்களை எழுதிய லூக் லாய்ர்ட் , ஷேன் மிக் அனால்லி, மற்றும் கேசி மஸ்கிரேவ்ஸ் தட்டிச் சென்றனர். பட்டர்பிளைஸ் ஆல்பத்திற்காகவும் கேசி மஸ்கிரேவ்ஸ் சோலோ ஃபெர்மன்ஸ் பிரிவில் விருது பெற்றார்.
திரைப்பட இசை பிரிவில் சிறந்த இசைக்கான விருதை குவின்சி படத்திற்காக குவின்சி ஜோன்ஸ் பெற்றார்.சிறந்த இசை வீடியோ பிரிவில் தில் இஸ் அமெரிக்காவுக்காக சைல்டிஷ் காம்பினோ பெற்றார்.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது மிலி சைரஸ் , கார்டி பி , கேமிலா காபேலோ ஆகியோர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன