அந்தமான் நிகோபார் தீவுகளில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5.14 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் உண்டானது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் 4.7 ரிக்டர் தொடங்கி 5.2 ரிக்டர் வரை 8 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வியல் மையம் கூறியுள்ளது.

பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபோன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *