திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு நாட்டின் பொருளாதார நிலையை சீர்குலைத்துள்ளது

வேலைவாய்ப்பின்மை, வேளாண்மை நலிந்துவிட்ட அவலத்தையும் நாடு சந்தித்துள்ளது

திமுக தேர்தல் அறிக்கை வாயிலாக, மதசார்பற்ற அரசை மத்தியில் உருவாக்க திமுக உறுதியளிக்கிறது

தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு

 ஆன்லைன் மூலமாக தேர்தல் அறிக்கைக்கு ஆலோசனைகள், கருத்துகள் வழங்கியவர்களுக்கு நன்றி

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் தமிழை இணை ஆட்சிமொழியாக்க சட்டத் திருத்தம் செய்யப்படும்

மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும்

பொருளாதாரத்தை சீரமைக்க சிறப்பு அந்தஸ்துடன்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்

சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிலை மாற்றப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை

தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இலங்கை அகதிகளுக்கு மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்

மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

கீழடியில் அகழாய்வுகள் தொடரும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும்

11 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்

தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஒரு கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவர்

10ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்

உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்

மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்

கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்

கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் அரை விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்

கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்

சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அனுப்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம்

நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்

குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்

கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை

கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்

பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *