காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – CRPF வீரர்கள் 18 பேர் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – CRPF வீரர்கள் 18 பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா  பகுதியில், கோரிப்போரா என்ற இடத்தில், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகல் 3 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் வீரர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் இரண்டு வாகனங்களில் ரோந்து பணிக்காக சென்றுள்ளனர்.

இந்த வாகனங்களை குறிவைத்து, சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததில், 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *