CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்கவுள்ளன.

ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடையும் இந்த தேர்வுகளை 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்காக சுமார் ஐயாயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள்,  பறக்கும் படையினர்,  மேற்பார்வையாளர்கள் உட்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.

வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க இந்த ஆண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *