ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடத்துவதாக மம்தா மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடத்துவதாக மம்தா மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

மக்களை சூறையாடி கொள்ளையடித்தவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செயல்படுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக மேற்கு இந்திய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க அப்பகுதி பாஜகவினர் செல்போன்களில் பிளாஷ் விளக்கை ஆன் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு பிரதமர் மோடி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து, உயர்நீதிமன்றத்தின் கிளையையும் தொடங்கி வைத்து உரையாற்றினார். மகா கூட்டணியை விமர்சனம் செய்த மோடி,சாரதா நிதி நிறுவனம் மூலம் லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு ஆதரவாக மம்தாவின் அரசு செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.

முதலமைச்சராக மம்தா உள்ள போதும் அதிகாரம் வேறு யார் கையிலோ இருப்பதாகவும் மோடி விமர்சித்தார். கலை, இலக்கியம், திரைப்படம் போன்றவற்றுக்காக புகழ் பெற்று விளங்கிய வங்காளத்தில் கொள்ளை, வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஜனநாயகத்தன்மையற்ற முறையில் மம்தா ஆட்சி புரிந்து வருவதாகவும் அவர் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *