வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் அதிகரிப்பு

2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 9 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், வருமான வரி செலுத்தியோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், மத்திய நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்தியோரின் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சமாக இருந்ததாகவும், ஆனால், 2017-18ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக கூறிய ஹஷ்முக் ஆதியா, 2017-18ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த 9 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை விட, தற்போது, 9 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நேரடி வரி வருவாய் 10 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *