ரஷ்ய அரசுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி ப்ளுவேல் விளையாட்டை முடக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ப்ளுவேல் இணையதள விளையாட்டில் மாணவர் விக்னேஷ் உயிரிழந்ததையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, Google, Facebook உள்ளிட்ட சமூக தளங்கள் மத்திய அரசின் விதிகளுக்கு உட்படும் வகையில் சட்டம் இயற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரி முருகன் மேற்பார்வையில் குழு அமைத்து, வலைதளங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சமூக ஆர்வலர்கள், உளவியலாளர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கூட்டாந்தோப்பு கிராமத்தில் ப்ளூவேல் கேம் விளையாடி பிளேடால் விரலை கிழித்து கொண்ட பள்ளி மாணவர் மீட்கப்பட்டான். இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக பள்ளி மாணவர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *