மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆண் நண்பர் கைது

மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆண் நண்பர் கைது

மும்பையில் ஓடும் ரெயிலில் பயணிகள் முன்னிலையிலேயே தோழியை மானபங்கப்படுத்தி கொலை செய்ய முயன்ற ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இரவு 11 மணி அளவில் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் முனையத்தில் இருந்து தாதர் நோக்கிச்சென்ற மின்சார ரெயிலின் ஊனமுற்றோருக்கான பெட்டியில் அமர்ந்து தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண்ணுக்கு தான் இந்த விபரீதம் அரங்கேறியது.

கல்யான் ரெயில் நிலையத்தில் இருந்து தாதர் ரெயில் நிலையத்துக்கு இடைபட்ட தூரத்தில் அந்த இளைஞர் தன்னுடன் வந்த பெண்ணை கடுமையாக தாக்கி தலை முடியால் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். பயணிகள் முன்னிலைலேயே இந்த சம்பவம் அரங்கேறிய போதும், பெட்டியின் நடுவே தடுப்பு இருந்த காரணத்தினால் தடுக்க முடியாமல் காவலர் உள்ளிட்ட பலரும் இளைஞரை எச்சரித்துள்ளனர். அதனை பொருட்படுத்தாத இளைஞர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் அத்துமீறி மிக கடுமையாக நடந்து கொண்டார்.

ஒரு வழியாக தாதர் ரெயில் நிலையம் வந்த பிறகு அந்த இளைஞரிடம் இருந்து அந்த பெண்ணை ரெயில்வே போலீசார் மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் ரபீக் ஷேக் என்பதும், போதையில் இருந்த அவர், தனது தோழியான அந்த பெண்ணிடம் பெற்ற கடனை கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அடித்து மானபங்கம் செய்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற பெட்டியில் பயணித்த ஊனமுற்ற பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *