மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்ஜின் இறுதி சடங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தாய்லாந்து மன்னராக கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய பூமிபால், தனது 88-வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். மக்களும், உலகத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த ஓராண்டாக அவரது உடல் அரண்மனை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி மிகுந்த ஆடம்பரமான முறையில் அவரது இறுதி சடங்கு வரும் 25-ம் தேதி நடைபெற்றது. இந்து மற்றும் புத்த மத முறைப்படி நடக்கவுள்ள இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*