தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை விமர்சிக்கும் சிலர், தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உதவிய வரலாறு இருக்கிறதா? என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதிமுகவின் 47ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றி அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.