தமிழக மக்களுக்கான தமது பணி தொடரும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவுக்கு அண்மையில் இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது சிவிலியன் விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையுலகம், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், அமைச்சர் மா.பா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் இளையராஜாவை நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்த னர். .
இதையடுத்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப் பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, தம்மை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள் , அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் என அனைவருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் மக்களுக்காக தமது பணி தொடரும் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார். .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*