குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் 40 இடங்களில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் 40 இடங்களில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஆளும் கட்சியின் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் மீது ஆரம்பம் முதலே குட்கா ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தபோது அவர் மீது தமிழக முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்ததே, இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அவரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல், இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாகப் பொறுப்பில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனையிட்டு வருகிறது.
அதேபோல் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனைகள் நடத்துவருகிறது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களின் வீடுகளில் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடத்தும் அளவிற்குத் தமிழக அரசு அமைச்சர்களுக்கு உயர் அதிகாரிகளுக்கும் ஊழலுக்குத் துணை போவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளது என்பது கண்டனத்திற்கு உரியது. இந்தச் சோதனையால் தமிழகம் பெரும் அவமானத்திற்கும், தலைகுனிவிற்கும் உள்ளாகியுள்ளது.
எனவே, இனியும் காலத்தை கடத்தாமல் தமிழக முதல்வர் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் தலைமை இயக்குனர் டி கே ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கோருகிறேன்.இல்லையெனில் இவர்களை பதவி நீக்கம் செய்ய தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
2018-09-05