கியூபாவின் பாரம்பரிய பானம் ஒன்றின் 200-வது ஆண்டு விழாவை, அங்குள்ள விடுதிகள் கொண்டாடி வருகின்றன. இது, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹவானா நகரில் உள்ள ஃப்ளோரிடிடா என்ற விடுதியில் கான்ஸ்டான்டினோ ரிபலைகுவா என்ற சமையலர் 1817-ம் ஆண்டு தயாரித்த டைகுரி என்ற பானம் பின்னாள்களில் புகழ்பெற்றது. எலுமிச்சை சாறு, சர்க்கரையுடன் மதுவை கலந்து தயாராகும் டைகுரி, பல்வேறு அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்களின் விருப்ப பானமாகும். டைகுரி பானம் 200-வது ஆண்டை எட்டுவதைக் கொண்டாடும் வகையில், ஹவானாவில் உள்ள ஃளோரிடிடா உள்ளிட்ட பல்வேறு விடுதிகள் கொண்டாடி வருகின்றன. வாடிக்கையாளர்களைக் கவர, பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *