காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்; பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது சுப்பிரமணிய சாமி பரபரப்பு புகார்…

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் கடந்த மாதம் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதையடுத்து, சில ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பாஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே ரபேல் விமானம் வாங்குதல் தொடர்பான விவகாரத்திலும் நிர்மலா சீத்தாராமன் தகவலுக்கு கங்கிரஸ் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*