உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு கொடுக்கும் விருது தான் தங்க காலணி. ஆனால் உலகின் மிக விலை உயர்ந்த தங்க காலணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த விலை உயர்ந்த, தங்க காலணியில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டு இந்த காலணியின் விலை சுமார் ரூ.123 கோடி ஆகும்.
மேலும் உலகின் மிக விலை உயர்ந்த, தங்கத்தால் ஆன ஜொலிக்கும் காலணியை தயாரிக்க 9 மாதங்களானதாகக் கூறப்படுகிறது. இந்த தங்க ஆடம்பர காலணியை துபாயை சேர்ந்த ஜெட்டா என்ற நிறுவனமும், பாசியன் ஜூவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி காலணியின் விலை 123 கோடி கொடுத்து வாங்க போகுவது யார் என்பது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.