இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி, நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நாளை, பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் கொல்கத்தாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நாளை இப்போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *