அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 37காசுகள் சரிந்து எழுபது ரூபாய் 7காசுகளாக இருந்தது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 55டாலராகக் குறைந்ததால் இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்தது. நேற்றைய வணிகநேர முடிவில் ரூபாய் மதிப்பு 69ருபாய் எழுபது காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 37காசுகள் சரிந்து எழுபது ரூபாய் 7காசுகளாக இருந்தது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கியதே ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் பதினொரு மணியளவில் 408புள்ளிகள் சரிந்து 36ஆயிரத்து 24ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 130 புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 822ஆக இருந்தது. அமெரிக்கப் பங்குச்சந்தைகளும் ஆசியப் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்ததே இந்தியப் பங்குச்சந்தையிலும் சரிவு ஏற்படக் காரணமாகக் கூறப்படுகிறது.