தாஜ்மகாலுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.250 அதிகரிக்கப்பு

தாஜ்மகாலுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க இந்தியர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தாஜ்மகாலை பார்க்க இந்தியர்களுக்கான நுழைவு கட்டணம் 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு இந்தக் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சார்க் நாட்டினருக்கு 540 ரூபாயில் இருந்து 740 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாள் தோறும் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, பராமரிப்பு செலவுகளுக்காக கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *