இது தொடா்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகா் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்ட செயலாளராக சோளிங்கர் ரவி, இணைச் செயலாளராக அருணாச்சலம், உள்ளிட்டோர் ரஜினிகாந்த் ஒப்புதலுடன் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கிளை, வார்டு மன்றங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகாராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு பொறுப்புகள் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2018-01-22