கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அங்கு நடைபெற்று வருகிறது.
இதன் பதவிக்காலம் மே 30ஆம் தேதியுடன் நிறைவடைவதால், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் முற்பகல் 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி மற்றும் நடத்தை விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர்.