கடப்பாரையை வைத்து நெம்பினாலும் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க முடியாது – ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி

சொடக்கு போட்டால் ஆட்சி கவிழும் என்று பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, கடப்பாரையை வைத்து நெம்பினாலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சரளையில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று கூறினார்.

இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடப்பாரையை வைத்து நெம்பினாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *