அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் முதன் முறையாக ஆஃப்கானிஸ்தான் செல்ல உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா சார்பில் 14 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை அவர் ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றதில்லை.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினருடன் டிரம்ப் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். அப்போது அங்கிருந்த விமானப் படைத் தள்பதி தன்னை வாஷிங்டனில் சந்திக்குமாறு கூறிய டிரம்ப், அல்லது தான் அவரை ஆஃப்கானிஸ்தானில் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.