புயல் பாதிப்பு மாவட்டங்களில் GST வரி செலுத்த அவகாசம் அளிக்க GST மன்றத்திடம் தமிழக அரசு பரிந்துரை

புயல் பாதித்த மாவட்டங்களில் தாமதக் கட்டணம் மற்றும் வட்டி இன்றி ஜி.எஸ்.டி. வரி செலுத்த ஒருமாத அவகாசம் அளிக்குமாறு ஜி.எஸ்.டி. மன்றத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

புயல் பாதித்த மாவட்டங்களில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் அக்டோபர் மாதத்துக்கான கணக்குகளை தாக்கல் செய்ய சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21 முதல் நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய 200 ரூபாய் தாமதக் கட்டணம் மற்றும் வட்டிக்கு டிசம்பர் 20 வரை விலக்கு அளிக்கவும், ஜி.எஸ்.டி.ஆர். 3 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர். 1 படிவங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. மன்றத்திடம் ஒப்புதல் பெறப்பட்ட பின் அது குறித்த அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *