தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மெட்ரோ ரயிலின் முதல்கட்ட சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மியாப்பூர் முதல் நாகோல் வரையிலான 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாநிலத்தின் ஆளுநர் நரசிம்மன், மத்திய உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், அதே மெட்ரோ ரயிலில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி, பயணித்தனர். சுமார் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் இவாங்கா டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.