வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி போட்டியில் 7-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி போட்டியில் 7-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10-வது சீசன் வங்க தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில், தாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 5-க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் மேலும் 2 கோல்களை அடித்தனர். இதன் மூலம் 7-க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

முன்னதாக நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஜப்பான், பாகிஸ்தான் அணிகள் முறையே தலா 2 கோல்கள் அடித்தனர். இதன்படி, இரண்டுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *