போர்வைகள் கொள்முதலில் ஆளுங்கட்சியினர் கொள்ளை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் இடம் பெறும் போர்வைகளை,          ‘கோ – ஆப்டெக்ஸ்’ நிறுவனத்தில் கொள்முதல் செய்ய மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மலிவான விலைக்கு வாங்கி, ஆளுங்கட்சி யினர் கொள்ளையடிக்கின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க, தமிழக அரசு, தற்போது பல லட்சம் போர்வைகளை கொள்முதல் செய்து வருகிறது.            கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போர்வை கள் இருப்பு உள்ளன.பிரதம சங்கங்களில் இருப்பு விபரம் பெற்று, பெட்ஷீட்களை இருப்பு வைக்கச் சொல்லி, தற்போது கொள்முதல் செய் யாமல், தரம் குறைவான, விலை மலிவானவிசைத்தறி போர்வைகளை வாங்கி வருவதாக, கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தமிழக அரசு நிவாரணமாக போர்வைகளை வாங்கி அனுப்புகிறது. இதை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்து வழங்குகிறது. இதன் மேலாண்மை இயக்குனராக உள்ள சபிதா, கைத்தறி போர்வைகளை தவிர்த்து, தரம் குறைந்த, விலை மலிவான, விசைத்தறி போர்வைகளை கொள்முதல் செய்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் நிறுவன அதிகாரிகள், செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்தகொள்முதலில், ஆளுங் கட்சியினர் தலையிட்டு,மிக தரம் குறைவான பெரிய ஆலைகளில் துடைக்க பயன்படும், டஸ்டர் நுாலில் உற்பத்தி செய்யப்படும் போர்வை உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.

ஒரு பேல், 80 ரூபாய்க்கு வாங்கி, நுகர் பொருள்வாணிப கழகத்திற்கு, 120 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை அடிக்கின்றனர்.அரசு உடனடி யாக தலையிட்டு, தர கட்டுப்பாடு உடன் கைத் தறியில் நெசவு செய்யபடும் தரமான போர்வை களை, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத் தின் மூலம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைத்தறி போர்வைகளை, கோ – ஆப் டெக்ஸ் நிறுவனத் தில் கொள்முதல் செய்ய வில்லையெனில், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் ஒருங்கிணைந்து, மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு கைத்தறி நெசவாளர்கள்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *