அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி – கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் உடல் நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வெடுத்து வரும் கருணாநிதி, அவ்வப்போது தொண்டர்களைச் சந்தித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிவாலயத்திற்கு சென்று திரும்பினார்.

இந்நிலையில், நேற்று கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அவருடன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட சிலர் உடன் இருந்ந்தனர். சுமார் 30 நிமிடங்கள் அறிவாலயத்தில் உள்ள அவரது அறையில் இருந்த கருணாநிதி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *