உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் நான் தான்: மெலனியா டிரம்ப்

உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் தாம் தான், என அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பயணங்களின் போது மெலானியா டிரம்ப் அணியும், ஆடை, அணிகலன்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகள் தங்கவைக்கப்பட்ட டெக்சாஸ் முகாமுக்கு சென்ற போது அவர் அணிந்திருந்த ஆடையில், எனக்கு கவலையில்லை.

உங்களுக்கு? எனக் கேட்பது போன்று அச்சிடப்பட்டிருந்தது. கடந்த மாதம் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது, அவர் அணிந்த ஆடைகள், மைக்கேல் ஜாக்சன் போன்றும், இன்டியானா ஜோன்ஸ் பட வில்லன் போன்றும் இருப்பதாக விமர்சனம் எழுந்தது- இது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு மெலானியா அளித்த பேட்டியில் தாம்தான் உலகிலேயே விமர்சனத்தால் அதிகம் தாக்குதலுக்கு ஆளான நபர் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *