வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வழங்கிய பரிந்துரைகளில் மாற்றம் செய்து, வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா பெறுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்து அமெரிக்க குடியுரிமைத்துறை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம், தகவல் தொழில்நுட்பப் பணிகளில் வெளிநாட்டவரை விட அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அதிபர் ட்ரம்பின் கொள்கையை நடைமுறைப் படுத்தும் வகையில் விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்திய இளைஞர்களுக்கான அமெரிக்க வேலை வாய்ப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவின் H-1B விசா பெற்றவர்களின் வாழ்க்கை துணைக்கு வேலை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *