மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள், ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முதலமைச்சர் முகுல் சங்மா தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் மார்ச் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் ரோவல் லிங்டா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் 8 பேரும் முதலமைச்சரின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 8 பேரும் அடுத்த வாரம் ஷில்லாங்கில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி, தேசிய மக்கள் கட்சியில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *