மெக்சிகோவில் போதை மறுவாழ்பு மையத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டின் ரோசாரியோ அருகில் இயங்கி வந்த இந்த மறுவாழ்வு மையத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்தரப்பைச் சேர்ந்த மற்றொரு கும்பல் அந்த மையத்துக்குள் புகுந்து திடீரென துப்பாக்கியால் சுட்டது. இந்த கோர சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *