பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, தமிழக அரசு அண்மையில் ஒரு மாத காலம் பரோல் என்னும் சிறைவிடுப்பு அளித்தது என்றும் பின்னர், பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பேரறிவாளனின் தந்தையின் உடல்நலம் பாதிப்படைந்துள்ள நிலையில், அவரைக் கவனிக்கவேண்டிய தேவையின் அடிப்படையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்றுதான், தமிழக அரசு அவருக்கு பரோல் அளித்தது என்பதை அனைவரும் அறிந்த ஒன்று என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் அனுமதிக்கான கால அளவு முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. ஆனால், அவரது தந்தையின் உடல்நலம் இன்னும் தேறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், சென்னையில் அரசு பொதுமருத்துவமனையில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவருக்குரிய பணிவிடைகளைச் செய்வதற்கு மேலும் சில மாதங்கள் பேரறிவாளன் உடனிருக்க வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பேரறிவாளனும் தனது உடல்நலத்தையும் பாதுகாத்திட உரிய சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனின் உடல்நலத்தையும் அவரது தந்தையின் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு மேலும் ஆறுமாத காலத்திற்குப் பரோல் அனுமதியை நீட்டித்து ஆணையிட வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டுமாத கால பரோல் அனுமதியின் போது பேரறிவாளனின் நடத்தையானது அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். எனவே, தமிழக அரசு அவரது நன்னடத்தையையும் கருத்தில் கொண்டு அவரது பரோல் காலத்தை இன்னும் ஆறுமாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் பரோல் – கோரிக்கை

* பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் அனுமதிக்கான கால அளவு முடிவுறும் நிலையை எட்டியுள்ளது

* ஆனால் அவரது தந்தையின் உடல்நலம் இன்னும் தேறவில்லை

* சென்னையில் அரசு பொதுமருத்துவமனையில் அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்

* அவருக்குரிய பணிவிடைகளைச் செய்வதற்கு மேலும் சில மாதங்கள் பேரறிவாளன் உடனிருக்க வேண்டிய தேவை உள்ளது

* பேரறிவாளனும் தனது உடல்நலத்தையும் பாதுகாத்திட உரிய சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது

* இதனால், பேரறிவாளனுக்கு மேலும் 6 மாத காலத்திற்குப் பரோல் அனுமதியை நீட்டித்து முதலமைச்சர் ஆணையிட வேண்டும்

* பரோல் அனுமதியின் போது பேரறிவாளனின் நடத்தையானது அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தது

* பேரறிவாளனின் நன்னடத்தை கருத்தில் கொண்டு அவரது பரோல் காலத்தை 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *