நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழக ஆளுநர் மாவட்ட வாரியாய ஆய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறிய தமிமுன் அன்சாரி, பாஜக தலைவர்கள் நாவடக்கத்தோடு பேசுவது நல்லது என்று தெரிவித்தார்.
2017-12-18